போய் வாருங்கள் கோபி

நேற்று தகடூர் கோபி (higopi) காலமானார்.

42 வயதே ஆனவர். மாரடைப்பு வரும் வயதே அல்ல.

நான் கணினி கற்க முயன்ற காலத்தில், தமிழையும் ஒருங்குறி எழுத்துருக்களையும் கணினிக்கு அறிமுகம் செய்தவர்களில் இவரும் ஒருவர். பல்வேறு குறிமுறைகள் இருந்த காலத்தில், அவற்றுக்கு ஒருங்குறி மாற்றியைத் தந்தவர்.

பெரும் கணினிப் பேராசிரியர்களும் நிறுவனங்களும் மட்டுமே தமிழ்க்கணிமைக்குப் பங்களித்த போது,
கணினி நிரலாக்கம் கற்ற எவரும் தமிழ்க்கணிமைக்குப் பங்களிக்கலாம் என்ற ஆர்வத்தை உருவாக்கியவர்.

பட்டாம்பூச்சி விளைவின் படி, எனக்கு தமிழ்க்கணிமையில் ஆர்வம் வரவும், சிறு முயற்சிகளான கணியம், FreeTamilEbooks.com, விக்கி பங்களிப்புகள் போன்றவற்றுக்கு ஆதாரமானவர்களில் இவரும், இவரது முயற்சிகளும் முக்கியமானவை.

என் தம்பி அருளாளன் உருவாக்கிய ஒருங்குறி மாற்றி, இவரது மாற்றியையும் அடிப்படையாகக் கொண்டது.

இது போல, இவரிடம் ஏகலைவனாகக் கற்றவர் பலரும் இருப்பர்.

எனது நண்பர்கள் இரவிசங்கர், செல்வமுரளி, உதயன், ஆமாச்சு எனப் பலருக்கும் நெருங்கிய நட்பில் இருந்தவர். நான் மிகவும் தாமதமாக தமிழார்வம் கொண்டதால், பழகத் தவறவிட்டவர்களில் இவரும் ஒருவர்.

மாரடைப்பும் சர்க்கரை வியாதியும் இளவயதினருக்கும் வருவது இயல்பாகி விட்டது.

எல்லா இலையும் ஒருநாள் உதிர்ந்தே தீரும். ஆனால் இலை பழுத்து உதிர்வதே இயற்கை.

முதிரும் முன் உதிரும் இலைகள், நமக்கு போதிப்பது என்ன?

 • உடல் நலம் பேணுக.
 • குடும்பத்தினருக்கு போதிய நேரம் தருக.
 • வேலை மட்டுமல்ல வாழ்க்கை.
 • போதிய உறக்கமும், நல்ல உணவும், உடற்பயிற்சியும், உடல் நலமும் பெற ஆவன செய்க.
 • வருட வருமானத்தை விட 10-20 மடங்காவது பணம் தரும் டெர்ம் பிளான் எனும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேருக.
  (நாம் இல்லாமல் போனாலும், குடும்பத்திற்கு வருவாய் தரும் வழிகளில் இதுவும் ஒன்று )

இவை எனக்கே நான் போதித்துக் கொள்பவை.
இவற்றை என் நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன்.

வேறென்ன? வெறுமையாய் உள்ளது மனம்.
போய் வாருங்கள் கோபி! உங்கள் தமிழ்த் தொண்டுகள் என்றும் ஏகலைவன்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.

 

– த. சீனிவாசன்

 

தகடூர் கோபியைப்பற்றி அறிய, பேரா. மு. இளங்கோவன் அவர்கள் எழுதிய வலைப்பதிவு இங்கே உள்ளது.

muelangovan.blogspot.in/2009/01/blog-post_11.html

Advertisements

2 thoughts on “போய் வாருங்கள் கோபி

 1. [Jan 30, 2018] நேற்று தற்செயலாக தமிழ் நாளிதழில் கண்ட பொழுது நம்பவே முடியவில்லை.

  திரு. கோபியின் தமிழ் பங்களிப்புகள் – ஒரு தூரத்தில் இருந்து “ஆகா, இவ்வளவு துணிச்சலுடன், தமிழுக்கு பங்களிக்கிறாரே!” என்று தோன்றும் ஒவ்வொரு முறை higopi.com அல்லது மொசில்லா firefox இணைப்புகளை பயன்செய்யும்பொழுதும்.

  தமிழ் கணிமைக்கு ஒரு திற மூல தன்னார்வலர் ஈர்ப்பு கொண்டுவரவும், தமிழ் கணிமைக்கு பொது விளக்கம், உள்ளீடு சிக்கல்கள் உள்ள சமயத்தில் ஒரு சராசரி, புழக்கம் கொண்ட வண்ணம் சமயோசித மென்பொருள்களை கொடுத்ததில் அவர் முன்னோடி!

  நண்பர் சீனி சொன்னபடி உங்களை ஒரு துரோணராகவே காணவும் தோன்றுகிறது – உங்கள் குறியீடு மாற்றங்கள் பட்டியல்கள் அருளாளன் பங்களிப்பில் தற்போது ஓபன்-தமிழ் என்ற திறமூல் திரட்டில் நிரலாளர்களுக்கு கிடைக்கும் வகை உள்ளது.

  உங்களை சந்திக்கவிட்டாலும் உங்களது பணிக்கும், உங்களது எதிர்பாராத மறைவின்கன் – உங்கள் நினைவிற்கும் தமிழ் கணிமை பயனர், மற்றும் ஆர்வலர், என்ற சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் குடும்பத்தினார்க்கும் எங்களது வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

  திரு. கோபி நினைவில் ஒரு தமிழ் கணிமைக்கான ஒரு மாணவர் பரிசு நிறுவுவதில் பங்களிக்க எனக்கும் நோக்கம் உள்ளது.

  -முத்து

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s